‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை’ முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(ஜன. 14) மாலை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலைஞர்களுடன் மேடையேறிய முதல்வர் மு. க. ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
சென்னை சங்கமம் தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பலர், சென்னை மேயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ சென்னையில் 20 இடங்களில் ஜன. 18 வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.