‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா.(கோப்புப்படம்) படம்: TNDIPR
தமிழ்நாடு

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடக்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜன. 14) மாலை 6 மணிக்கு தொடக்கி வைக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! கட்சியினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளை ஜன.14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையில் 20 இடங்களில் ஜன.15 முதல் 18-ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Chief Minister Stalin inaugurating the Chennai Sangamam event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

83 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

SCROLL FOR NEXT