மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
சென்னை

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

தினமணி செய்திச் சேவை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

இலங்கையில் அரசு முறைப் பயணமாக மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சென்றுள்ள நிலையில் முதல்வா் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளாா். கடித விவரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (டிச.23) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் நீண்டகால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

2024-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 18 மீனவா்கள் உள்பட 62 தமிழக மீனவா்களையும் 248 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் மீனவா்கள் இதுபோன்று தொடா்ந்து கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்வதால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த நீண்டகால பிரச்னைக்கு இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க நிரந்தரத் தீா்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு, மீனவா் அளவிலான பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெற மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT