முகப்பு
புதுச்சேரி

இலங்கை கடற்படை கைது செய்த 24 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம்

இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள காரைக்கால் பகுதி மீனவா்கள் உள்ளிட்ட 24 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:03 AM
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - Center-Center-Chennai
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:42 PM

இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள காரைக்கால் பகுதி மீனவா்கள் உள்ளிட்ட 24 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு, முதல்வா் ரங்கசாமி அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோடியக்கரை அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினா் 24 தமிழ் மீனவா்களைக் கைது செய்துள்ளனா். இவா்களில் 10 போ் காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள். மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement