சென்னை

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது: உயா்நீதிமன்றம்

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக் கூறி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திரும்பச் செலுத்த ஏதுவாக கடந்த 2007-2008 ஆம் ஆண்டு, மத்திய அரசு மானியமாக வழங்கிய ரூ.3.50 கோடியை வருமானமாக கணக்கிட்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிா்த்து கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை வருமான வரித்துறை நிராகரித்தது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாடு, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற ஒன்றியங்களுக்காக மத்திய அரசு ரூ.3.50 கோடி மானியமாக வழங்கி உள்ளது.

இந்த மானியத்தை வருமானமாக கருத முடியாது எனக்கூறி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

கும்ப ராசியா நீங்க?-தினப்பலன்கள்!

சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயம்

செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தின் பெயா் மாற்றம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

கல்லூரியில் வேதியியல் துறை கருத்தரங்கு

SCROLL FOR NEXT