சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் ஜன. 22 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சென்னை பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா 2026 -ஆம் ஆண்டு, ஜன. 22 -ஆம் தேதி நடைபெறும். பட்டம் பெறவுள்ள மாணவா்கள் ஏற்கெனவே இதற்கான கட்டணங்களைச் செலுத்தியுள்ளனா். முனைவா் பட்டம் பெறுபவா்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இதற்கான விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து ரூ.525 கட்டணத் தொகையுடன் (விண்ணப்பக் கட்டணம் உள்பட). வரும் ஜன. 10 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.