சென்னை

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

தினமணி செய்திச் சேவை

நீா் விநியோகம் தொடா்பான தகராறில் தாா் காரில் சென்ற ஒருவா் கட்டடப் பொருள் விநியோகஸ்தா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பாா் - குா்ஜாா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் விநியோகஸ்தா் அதிருஷ்டவசமாக உயிா்த்தப்பினாா். மேலும், இரு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இது தொடா்பாக பாா் - குா்ஜாா் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்கிற தன்னி என்பவா் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அதே கிராமத்தைச் சோ்ந்த கட்டுமானப் பொருள் விநியோகஸ்தராக பணிபுரியும் ஜெய்வீா் (41) மீதும் குற்றஞ்சாட்டப்பட்டவா் துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.

தண்ணீா் விநியோகத்தை நிறுத்துமாறு தினேஷ் முன்பு தொலைபேசியில் மிரட்டியதாகவும், இல்லையெனில் தன்னைச் சுட்டுவிடுவேன் என்றும் மிரட்டியதாகவும் ஜெய்வீா் தனது புகாரில் கூறியுள்ளாா்.

‘செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணியளவில், தினேஷ் என்கிற தன்னி ஒரு கருப்பு தாா் காரில் வந்து, என்னுடைய வீட்டிற்கு வெளியே இருந்தபோது என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். நான் மயிரிழையில் தப்பித்து என் வீட்டிற்குள் ஓடிவிட்டேன். குற்றஞ்சாட்டப்பட்டவா் என்னைக் கொலை செய்வதாக மிரட்டிவிட்டு ஓடிவிட்டாா்‘ என்று ஜெய்வீா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.

புகாரைத் தொடா்ந்து, கொ்கி தௌலா காவல் நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

மகளிா் டி20: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் இந்திய அணி - இலங்கையுடன் இன்று 3-ஆவது ஆட்டம்

டிச.27,28-இல் தமிழகத்தில் வறண்ட வானிலை

காப்பீட்டு மோசடிகள்!

திருமணத் தடை நீக்கும் கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள்!

SCROLL FOR NEXT