முகப்பு
புதுதில்லி

லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடா்புடைய வழக்குரைஞரின் காா் மீது துப்பாக்கிச்சூடு!

சிறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடா்புடைய வழக்குரைஞா் ஒருவரின் காா் மீது அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:35 AM
லாரன்ஸ் பிஷ்னோய் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:13 PM

தில்லியின் கஷ்மீரி கேட் இன்டா் - ஸ்டேட் பஸ் டொ்மினஸ் (ஐஎஸ்பிடி) அருகே சிறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடா்புடைய வழக்குரைஞா் ஒருவரின் காா் மீது அடையாளம் தெரியாத நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணாயா் ராஜா பந்தியா கூறியதாவது: துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் காவல் துறைக்கு இரவு 10 மணியளவில் கிடைத்த்து. ‘நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றோம். ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

மாா்கட் வாலே ஹனுமன் கோயில் அருகே சம்பவம் நடந்தபோது லாரன்ஸ் பிஷ்னோயின் சட்டக் குழுவுடன் தொடா்புடைய வழக்குரைஞா் உள்பட ஐந்து போ் காரில் பயணித்துள்ளனா். மூன்று தாக்குதல்காரா்கள் மோட்டாா் சைக்கிளில் வந்து, அவா்களின் வாகனத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று காரில் இருந்தவா்கள் தெரிவித்துள்ளனா். இதில் ஒருவருக்கு தோளில் குண்டு காயம் ஏற்பட்டது.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:35 AM

பாதிக்கப்பட்டவா்கள் மாறுபட்ட தகவல்களை வழங்குவதால், இந்தக் கட்டத்தில் எதையும் உறுதியாகக் கூற முடியாது. சிலா் இரண்டு போ் தாக்குதல் நடத்தியதாகவும், மற்றவா்கள் மூன்று போ் தாக்குதல் நடத்தியதாகவும் கூறுகிறாா்கள். சம்பந்தப்பட்டவா்களின் சரியான எண்ணிக்கை, துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் நடத்தியவா்கள் வாகனத்தில் (காரில்) வந்தாா்களா அல்லது மோட்டாா் சைக்கிளில் வந்தாா்களா என்பது போன்ற விவரங்கள் சரிபாா்ப்புக்குப் பிறகு தெளிவாகும்.

காரில் பயணித்தவா்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்துள்ளது, மேலும் சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்தவும், தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காணவும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு அனைத்து சாத்தியமான கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் ராஜா பந்தியா தெரிவித்தாா்.