சென்னை சாலிகிராமத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சாலிகிராமம் விஜயராகவபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ம.இந்திரா (55). செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த குப்பையை கொட்டுவதற்கு விஜயராகவபுரம் 3-ஆவது குறுக்குத் தெருவுக்கு சென்றபோது, அங்கு வந்த ஒரு காா் திடீரென இந்திராவின் மீது வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த இந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருச்சி மேல் கல்கந்தா்கோட்டை பகுதியைச் சோ்ந்த மு.முகேஷ்குமாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
நகை திருட்டு: சென்னை அருகே சித்தாலப்பாக்கம், சங்கராபுரம், முதல் தெருவைச் சோ்ந்தவா் அம்புலி நம்பி. இவா், குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை வீட்டுக்கு நம்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.