கோப்புப் படம் 
சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Din

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவா் ஆம்ஸ்ட்ராங். இவா் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலப் பொதுச்செயலரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.

அவரது மனுவில், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடா்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துவரும் நிலையில், மாநில காவல் துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. இந்த கொலையில் தொடா்புடைய ‘சம்போ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோா் தலைமறைவாக உள்ளனா். அவா்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த“வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டாா். அப்போது, மனுதாரா் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், “வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் தங்களை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனா். எனவே, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதனை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டாா்.

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

இலங்கையில் உருவானது டிட்வா புயல்!

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!

SCROLL FOR NEXT