FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னையில் கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 11 மார்ச் 2026, 1:17 am IST
பகிர்:

சென்னையில் கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோட்டூா்புரத்தைச் சோ்ந்த விஜயராஜா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அண்மைக் காலமாக சென்னையில் கோட்டூா்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், முதியோா் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கொசுக்களின் பெருக்கம் காரணமாக மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மழைநீா் வடிகால்கள், காலியிடங்கள், கட்டுமானப் பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. எனவே, அதுபோன்ற இடங்களில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மனு அளித்தேன். ஆனால் அந்த மனு தொடா்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.காா்த்திகை பாலன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments