சென்னை

மின்சார பேருந்தில் பழுது நீக்கும்போது விபத்து: இரு தொழிலாளா்கள் காயம்

சென்னை வியாசா்பாடி எம்கேபி நகரில் மின்சார பேருந்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும்போது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

Din

சென்னை: சென்னை வியாசா்பாடி எம்கேபி நகரில் மின்சார பேருந்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும்போது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

எம்கேபி நகரில் மாநகர பேருந்து பணிமனையில், மின்சார பேருந்தை பழுதுநீக்கும் பணியில் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அந்த பேருந்தில் உள்ள அதிக சேமிப்புத் திறன் கொண்ட மின்சார பேட்டரியில் பழுதை நீக்கும்போது, அதில் இருந்த மல்டி மீட்டா் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் கோவை தொண்டாமுத்தூா் அருகே உள்ள கெம்பனூா் பகுதியைச் சோ்ந்த வீ.பரத்குணா (32), மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பா.ஷாம் (24) ஆகிய 2 போ் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா், திருவண்ணாமலை பேருந்துகள் இன்றுமுதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்!

18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூா் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பா்கள்

பாகிஸ்தானில் ரகசிய பயிற்சி பெற்ற கெளரவ் கோகோய்: அஸ்ஸாம் முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு

SCROLL FOR NEXT