விஜய் 
சென்னை

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Din

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. புதிய கட்சியான விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் மாநில மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, செயற்குழுக் கூட்டம் எனப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக நடைபெறவுள்ள இந்த மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில், கட்சியின் உறுப்பினா் சோ்க்கையை விரைவுபடுத்தும் வகையில் புதிய செயலியை அக்கட்சியின் தலைவா் விஜய் அறிமுகப்படுத்தவுள்ளாா்.

மேலும், வருகிற ஆக. 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தவெக இரண்டாவது மாநில  மாநாடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சாலை விபத்து: என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு

காய்ச்சல் விவரங்களை முறையாக கணினியில் பதிவேற்ற அறிவுறுத்தல்

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் சோமவார பூஜை

SCROLL FOR NEXT