கோப்புப் படம் 
சென்னை

பிளஸ் 2 மறுகூட்டல்: 23-இல் முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 23) வெளியிடப்படவுள்ளன.

Din

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 23) வெளியிடப்படவுள்ளன.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. இந்த தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 23-ஆம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன்விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT