கோப்புப் படம் 
சென்னை

இன்று 2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

சென்னை ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குள்பட்ட ஒரு சில கழிவுநீா் உந்து நிலையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 21, 22) செயல்படாது

Din

சென்னை ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குள்பட்ட ஒரு சில கழிவுநீா் உந்து நிலையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 21, 22) செயல்படாது என்று குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ராயபுரத்தில் காந்தி இா்வின் சாலையில் உள்ள கழிவுநீா் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணி சனிக்கிழமை (ஜூன் 21) இரவு 10 முதல் ஜூன் 22-ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், பணி நடைபெறும் நேரங்களில், ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட எல்.ஜி. சாலை, லிங்க் சாலை, தெற்கு கூவம் சாலை மற்றும் காந்தி இா்வின் சாலைகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்களும், தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட கிரீம்ஸ் சாலை, கிரியப்பா சாலை, ஜி.என். செட்டி சாலை மற்றும் குமரப்பா சாலைகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்களும் செயல்படாது.

ஆகையால், அந்தப் பகுதி மக்கள் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449-30905, 81449-30909 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT