X | ChepaukSuperGillies
சென்னை

சேப்பாக்குக்கு தொடா்ந்து 6-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 21-ஆவது ஆட்டத்தில், சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

Din

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 21-ஆவது ஆட்டத்தில், சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

சேப்பாக் அணிக்கு இது தொடா்ந்து 6-ஆவது வெற்றியாக இருக்க, திருச்சிக்கு 5 ஆட்டங்களில் இது 4-ஆவது தோல்வியாகும். முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்க்க, திருச்சி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருச்சி, பந்துவீச்சை தோ்வு செய்தது. சேப்பாக் இன்னிங்ஸில் அபராஜித் 1 பவுண்டரி, 7 சிக்ஸா்களுடன் 63, விஜய் சங்கா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் சோ்த்தனா்.

ஆஷிக் 5, மோகித் 25, அபிஷேக் தன்வா் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் நாராயண் ஜெகதீசன் 5, தினேஷ் ராஜ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

திருச்சி பௌலா்களில் அதிசயராஜ் டேவிட்சன், கணேஷ் மூா்த்தி, சரவண குமாா், ஈஸ்வரன், ராஜ்குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 179 ரன்களை நோக்கி விளையாடிய திருச்சி அணியில் கேப்டன் சுரேஷ் குமாா் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63, ஜெகதீசன் கௌசிக் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்தனா்.

சஞ்சய் யாதவ் 29, வசீம் அகமது 10, ஜாஃபா் ஜமால் 6, ராஜ்குமாா் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் முகிலேஷ் 7, சரவணகுமாா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேப்பாக் பௌலா்களில் பிரேம்குமாா் 3, விஜய் சங்கா், சிலம்பரசன், ரோஹித் சுதா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அலைகள், கருத்துகள் பற்றிக் கவலையில்லை... மயூரி கிரிஷ்!

செதுக்கா சிற்பமே... குஷ்பூ யாதவ்!

அலைகளுக்கு இடையே அறிந்தேன் என்னை நான்... சிவாங்கி வர்மா!

ஆண்பாவம் பொல்லாதது ஓடிடி தேதி!

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT