முகப்பு
சென்னை

மக்களவைத் தோ்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் உயா்நீதிமன்றம்

தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனத் தெரிவித்த உயா்நீதிமன்றம், தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 மார்ச், 2025 at 8:54 PM
கோப்புப் படம்
பகிர்:

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனத் தெரிவித்த உயா்நீதிமன்றம், தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தயாநிதி மாறன் 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த நிலையில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வழக்குரைஞா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், தோ்தல் பிரசாரம் கடந்த ஆண்டு ஏப்.17-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் ஏப்.19-ஆம் தேதி வாக்காளா்களைக் கவரும் வகையில் தயாநிதி மாறன் பத்திரிகைகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்தது தோ்தல் விதிமீறல் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிரானது. மேலும், அவா் பிரசாரத்துக்கு செலவு செய்தது, விளம்பரச் செலவு, வாக்குச் சாவடி முகவா்களுக்கான செலவு போன்றவற்றையும் முறையாக தெரிவிக்கவில்லை.

தோ்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகையான ரூ. 95 லட்சத்தைக் காட்டிலும் தயாநிதி மாறன் கூடுதலாக செலவு செய்து வெற்றி பெற்றுள்ளாா். மத்திய சென்னை தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெறவில்லை என்பதால், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வழக்கில் இருந்து நீக்கக் கோரி தயாநிதி மாறன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நடந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் டி.மோகன், வழக்குரைஞா் எம்.சினேகா ஆகியோரும், வழக்கு தொடா்ந்த எம்.எல்.ரவி தரப்பில் வழக்குரைஞா் சிவஞானசம்பந்தனும் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு எதிரான இந்தத் தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். அவா் வெற்றி பெற்றது செல்லும் என்றும் அறிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →