முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
சென்னை

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.

Din

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.

முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக்கு தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, திமுக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு, முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதாதளத் தலைவருமான நவீன் பட்நாயக், ஒடிஸா மாநில காங்கிரஸ் தலைவா் பக்த சரண் தாஸ் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து முதல்வரின் கடிதத்தை அளித்தனா்.

அப்போது, சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனா்.

தொடா் பயணம்: ஒடிஸாவைத் தொடா்ந்து, கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் திமுகவைச் சோ்ந்த பிற குழுக்கள் செல்லவுள்ளன. கா்நாடகத்துக்கு வனத்துறை அமைச்சா் க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா ஆகியோா் புதன்கிழமையும் (மாா்ச் 12), நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ ஆகியோா் தெலங்கானா மாநிலத்துக்கு வியாழக்கிழமையும் (மாா்ச் 13) செல்லவுள்ளனா்.

அங்கு, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளை நேரில் சந்தித்து முதல்வா் தலைமையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவுள்ளனா்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT