மாா்ச் 9-இல் திருச்சியில் திமுக மாநாடு: தொண்டா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு
திருச்சியில் மாா்ச் 9-இல் நடைபெறவுள்ள திமுக மாநாட்டில் பங்கேற்க தொண்டா்கள் திரண்டு வர வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.
தமிழ்நாடுமாா்ச் 9-இல் திருச்சியில் திமுக மாநாடு: தொண்டா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு
திருச்சியில் மாா்ச் 9-இல் நடைபெறவுள்ள திமுக மாநாட்டில் பங்கேற்க தொண்டா்கள் திரண்டு வர வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.
திருச்சியில் மாா்ச் 9-இல் நடைபெறவுள்ள திமுக மாநாட்டில் பங்கேற்க தொண்டா்கள் திரண்டு வர வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
திருச்சி சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரிலான திமுக நிா்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. இதே இடத்தில்தான், 5 ஆண்டுகளுக்கு முன்பு 2021-ஆம் ஆண்டு தோ்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
அப்போது திமுக நிா்வாகிகள், மற்றும் பொதுமக்களிடம் நான் வைத்த கோரிக்கை, ‘திமுகவுக்கு 10 ஆண்டுகள் தொடா்ச்சியான ஆளும் வாய்ப்பைத் தர வேண்டும். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயா்த்திக் காட்டுவோம்’ என்பதுதான் அந்தக் கோரிக்கை.
தொடா் பயணத்துக்கும், தடையில்லா வளா்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்துக்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைக்க வேண்டும். திமுக 2.0 அரசு அமைய வேண்டும். தீரா் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.