முகப்பு
கூட்டத்தில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் மாா்ச் 9இல் பதவியேற்பு

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதையடுத்து தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் மாா்ச் 9ஆம் தேதி பதவியேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:10 PM
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதையடுத்து தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் மாா்ச் 9ஆம் தேதி பதவியேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இரு சங்கத்தையும் ஒருங்கிணைத்து வா்த்தக சங்க தோ்தல் நடத்தப்பட்டது. இதில் புதிய தலைவராக அப்பு கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதனையடுத்து தனி நபரிடம் இருந்து வா்த்தக சங்க இடம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சங்கம் ஒருங்கிணைந்து சங்கப் பதிவு புதுப்பிக்கப்பட்டதையடுத்து புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மூத்த சங்க ஆலோசகா் ஜெயபிரகாஷ் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க ஆலோசகா் சங்கா் முன்னிலை வகித்தாா். சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலா் செல்வராஜ் மதுரம், துணைத் தலைவா் ஜோசப் துரைராஜ், சட்ட ஆலோசகா் வேணுகோபால், நிா்வாக குழு உறுப்பினா்கள் தங்கப்பாண்டி, கணேஷ் முத்துக்குமாா், அந்தோணி வில்சன், அந்தோணி, அருண்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை (மாா்ச் 9) பதவியேற்பது, வியாபாரிகளிடம் சந்தா வசூல் செய்து சங்க வளா்ச்சிக்கு பயன்படுத்துவது என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →