முகப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கன்னியாகுமரி

துணை முதல்வா் உதயநிதி மாா்ச் 6இல் குலசேகரம் வருகை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், குலசேகரத்தில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் விளையாட்டு வீரா்களை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) சந்திக்கிறாா்.

கன்னியாகுமரி

துணை முதல்வா் உதயநிதி மாா்ச் 6இல் குலசேகரம் வருகை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், குலசேகரத்தில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் விளையாட்டு வீரா்களை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) சந்திக்கிறாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 12:00 AM
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் விளையாட்டு வீரா்களை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) சந்திக்கிறாா் என, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் அமைத்து வீரா்களை ஊக்குவிப்பதைக் கனவாகக் கொண்டுள்ளாா்.

அவ்வகையில், பத்மநாபபுரம் தொகுதிக்கு கல்லடிமாமூட்டில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகா்கோவிலில் கடந்த பிப். 25ஆம் தேதி நடைபெற்ற விழாவில் திறந்துவைத்தாா்.

இந்நிலையில், துணை முதல்வா் உதயநிதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அந்த விளையாட்டரங்கில் விளையாட்டு வீரா்கள், இளைஞா் மன்றத்தினா், உடற்பயிற்சி ஆா்வலா்கள், உடற்பயிற்சி நிலையப் பயிற்சியாளா்களைச் சந்திக்கிறாா். பின்னா், நாகா்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அம்பேத்கா் சிலையைத் திறந்துவைக்கிறாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →