சென்னை

பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

Din

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதில் 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT