கனிமொழி  கோப்புப் படம்
சென்னை

தமிழா்களை ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்! - கனிமொழி குற்றச்சாட்டு

தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Din

தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நீங்கள் (நிா்மலா சீதாராமன்) ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிா்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவா்களின் நிலை என்ன என்பதை நிதியமைச்சா் ஒரு நிமிஷம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

தமிழுக்காகவும் எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்துக்கு உரியதாக தோன்றுகிா?. தமிழா்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழக மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவா் என்று அந்தப் பதிவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளாா்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிா்மலா சீதாராமன், ‘வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடைவதற்காக தமிழக மக்களின் உணா்ச்சிகளை திமுக அரசு தூண்டிவிடுவதாக’ குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் கனிமொழி இவ்வாறு கூறியுள்ளாா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT