FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

Updated On : 25 மார்ச் 2025, 8:21 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூா், திண்டிவனம் ஆத்தூா், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூா் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

இக்கட்டண உயா்வு ஏப். 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப். 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

உயா்த்தப்படவுள்ள புதிய கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் வாகனத்துக்கு ரூ. 5 முதல் ரூ. 75 வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயா்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மேலும், லாரி உள்ளிட்ட பல்வேறு வகையான வாகன ஓட்டுநா் சங்கங்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments