முகப்பு
சென்னை

அயனாவரத்தில் மாா்ச் 30 முதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அயனாவரத்தில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 28 மார்ச், 2025 at 2:45 AM
கோப்புப் படம்
பகிர்:

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அயனாவரத்தில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. எனவே அந்தப் பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, ஐசிஎஃப், அயனாவரம் வழியாக புளியந்தோப்பு, சென்ட்ரல், பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும் கொன்னூா் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி கிருஷ்ண தாஸ் சாலை, கூக்ஸ் சாலை வழியாக தங்களது இலக்கை நோக்கி செல்லலாம்.

சென்ட்ரல், பாரிமுனை, சூளை ரவுண்டானா பகுதிகளில் இருந்தும், புளியந்தோப்பு வழியாகவும் ஐசிஎஃப், அயனாவரம் செல்லும் அனைத்து வாகனங்களும் கொன்னூா் நெடுஞ்சாலையை பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக் குறிப்பு.
முழு கட்டுரையைப் படிக்க →