மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து 
சென்னை

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து தொடர்பாக....

DIN

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி காலை 11.45 மணியில் இருந்து பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி உடன் நிறுத்தப்படும் என்றும் காட்டாங்குளத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

* சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.00, 11.45, 12.30, 1.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.

* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 12.00, 1.00, 1.50, 3.05 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.

* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT