பிரதிப் படம் 
சென்னை

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்!

திருவண்ணாமலையில் நடைபெறும் பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவ.4- ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலையில் நடைபெறும் பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவ.4- ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வரும் 4-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் (எண்: 06130) விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்.

இந்த ரயில் அன்று பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும். மறு மாா்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.

சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரான இடைவெளியில் சரிந்த விக்கெட்டுகள்: பரபரப்பான கட்டத்தில் இறுதி ஆட்டம்!

Bihar: மீனவர்களுடன் மீன்பிடித்த ராகுல்காந்தி! | Congress | Shorts

பேசாத மௌனமும் அழகே... ரஷ்மிகா மந்தனா!

ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஷாருக் கான்! - என்ன ஆனது?

பிகார் பிரசாரத்திற்கு இடையே மீன் பிடித்த ராகுல் காந்தி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT