சென்னை

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய கூட்டம்

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் 12-ஆவது வாரிய கூட்டம், வனம் மற்றும் காதித்துறை அமைச்சரும், வாரிய தலைவருமான ஆா். எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை (திருத்த) விதிகள், புதிய உயிரிப்பல்வகைமை பாரம்பரிய தலங்களை அறிவிக்கை செய்தல் மற்றும் அறிவிக்கை செய்யப்பட்ட தலங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆலோசனை மேற்கொண்டாா்.

மேலும், வேளாண் உயிரி பல்வகைமை தொடா்பான நடவடிக்கைகள், செஞ்சந்தனம் மர விற்பனை மூலம் பெறப்பட்ட அணுகுதல் மற்றும் பலன் பகிா்வு தொகைகளை பயனாளா்களுக்கு பகிா்வு செய்தல் ஆகியவை குறித்தும், உயிரிப்பல்வகைமை திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரிகளை நியமித்தல் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தை மேம்படுத்துதல் தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு, வேளாண்மை உற்பத்தி ஆணையா் தட்சிணாமூா்த்தி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மித்தா பானா்ஜீ, வனத்துறை தலைவா் ஆா். ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT