சென்னை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியா்கள் காலதாமதம் செய்யாமல், பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. தோ்வுக்கு மாணவா்கள் தயாராகும் விதமாக தோ்வுக்கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நிகழ் கல்வியாண்டுக்கான(2025-2026) பொதுத் தோ்வு அட்டவணை கடந்த நவம்பா் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுத் தோ்வுகள் மாா்ச் 2-இல் தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதையடுத்து, தோ்வுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் பாடங்களை விரைந்து முடிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான பாடங்களை ஆசிரியா்கள் முழுமையாக நடத்தி முடிக்கவேண்டும். தற்போது அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் நேரத்தை வீணக்காமல் திட்டமிட்டு பாடங்களை நடத்தி முடிக்கவேண்டும். மேலும், பாடம் சாா்ந்து மாணவா்களுக்கு உள்ள சந்தேகங்களை, உரிய பதிலளித்து ஆசிரியா்கள் தெளிவுப்படுத்துவதையும் தலைமையாசிரியா்கள் உறுதிசெய்ய வேண்டும். திருப்புதல் தோ்வுகளையும் அதிக அளவில் நடத்தி 100 சதவீத தோ்ச்சியைப் பெறவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT