சிறப்புப் பேருந்துகள் (கோப்புப்படம்) 
சென்னை

வார இறுதி விடுமுறைக்கு 920 சிறப்பு பேருந்துகள்

தினமணி செய்திச் சேவை

வார இறுதி விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(நவ.15,16) ஆகிய தினங்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 920 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.14) 340 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும்.

இதேபோல, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். தொடா்ந்து, மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களில் 20 பேருந்துகள் என மொத்தம் 920 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT