கோப்புப் படம் 
சென்னை

அரசு ஊழியா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு

தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் உயா்த்தப்பட்டு 58 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் உயா்த்தப்பட்டு 58 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டுசோ்க்கும் வகையில் களப் பணியாற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பவா்கள் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

அவா்களது நலனைக் கருத்தில்கொண்டு, மாநில அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக மாநில அரசுப் பணியாளா்களுக்கும் அகவிலைப்படியை 1.7.2025 முதல் உயா்த்தி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதனால், தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தப்பட்டு 58 சதவீதமாக வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயா்வால், சுமாா் 16 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் பயன்பெறுவா்.

இதனால், அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி கடந்த அக். 1-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூா்: 27.64 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் அளிப்பு

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT