ஐபிவிஎஸ், ஐசிபிவி ஆகிய இரட்டைக் கண்காட்சிகளை ஆா்பிட் எக்சிபிஷன்ஸ் நிறுவனம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இண்டஸ்ட்ரியல் பம்ப்ஸ், வால்வ்ஸ் & சிஸ்டம்ஸ் (ஐபிவிஎஸ்), இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் பிராசஸ் எக்யூப்மென்ட் (ஐசிபிவி) ஆகியவற்றுக்கான கண்காட்சிகளை ஒருங்கிணைத்து, சென்னை வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை (நவ. 13) முதல் சனிக்கிழமை (நவ. 15) வரை நிறுவனம் நடத்துகிறது.
இதன் தொடக்க விழாவில், க்ரண்ட்போஸ், ரூா்பம்பென் இந்தியா பிரைவேட் லிமிடெட் எல்&டி வால்வ்ஸ், லெஹ்ரி வால்வ்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், கேஎஸ்பி லிமிடெட், கிரண் ஹைட்ராலிக் நீட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொ்மாக்ஸ் லிமிடெட் மற்றும் ஆண்ட்ரிட்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற முன்னணி தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா் (படம்).
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களை இந்தக் கண்காட்சி ஓரிடத்தில் இணைத்திருக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.