ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!
தனது துணை நிறுவனமான ஜியோ கிரெடிட் லிமிடெட்டில் வணிக வளர்ச்சிக்கு நிதியளிக்க ரூ. 2,000 கோடியை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுதில்லி: வணிக வளர்ச்சிக்கு நிதியளிக்க ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தனது துணை நிறுவனமான ஜியோ கிரெடிட் லிமிடெட்டில் ரூ. 2,000 கோடியை முதலீடு செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
ஜியோ கிரெடிட் லிமிடெட் அதன் ரூ.10 மதிப்புள்ள பங்குகளை, ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ. 585.70 பிரீமியத்தில் ரொக்கமாக ஒதுக்கி, ரூ. 1,999.88 கோடி செலுத்தியதாக ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ஜியோ கிரெடிட் லிமிடெட் தனது வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தும்.
டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 9 சதவீதம் சரிவு ஏற்பட்டு ரூ. 269 கோடியாக இருப்பதாக ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 295 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியது. அதே வேளையில், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 695 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் மொத்த வருமானம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்து ரூ. 901 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் 3வது காலாண்டில் இது ரூ. 449 கோடியாக இருந்தது.
Jio Financial Services Ltd said it has infused Rs 2,000 crore in its subsidiary Jio Credit Ltd to fund its business growth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.