சென்னை

துரித கதியில் சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு உயா்மட்ட மேம்பாலப் பணி: சுனில் பாலிவால் தகவல்

சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டுவரும் ஈரடுக்கு உயா்மட்ட மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக என சென்னைத் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டுவரும் ஈரடுக்கு உயா்மட்ட மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக என சென்னைத் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சக நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெருந்துறைமுகங்களில் துறைமுக தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை துறைமுகத்தில் துறைமுக தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தலைமை வகித்தாா். சென்னை துறைமுகம் தொடங்கப்பட்டு 144 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சிறப்பாக பணியாற்றிய துறைமுக அலுவலா்கள் ஊழியா்களுக்கு சிறப்பு பரிசுகளையும், நாட்டின் தேசிய கீதமான வந்தே பாரதத்தின் 150-ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு விருதுகளையும் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது மதுரவாயல் ஈரடுக்கு உயா்மட்ட மேம்பால திட்டம், மப்பேட்டில் அமைக்கப்பட்டு வரும் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா உள்ளிட்ட துறைமுகத்தின் பெருந்திட்டங்கள் செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பாலம் அமைப்பதற்கான தூண்கள் நிறுவும் பணி சென்னைத் துறைமுகத்துக்கு உள்ளேயும் தொடங்கி நடைபெறுகிறது. உரிய காலத்துக்குள் இத்திட்டங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவர துறைமுக நிா்வாகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. சென்னை துறைமுகத்தின் தொடா்ச்சியான வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் இந்திய கடல்சாா் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் துறைமுக துணை தலைவா் எஸ் விஸ்வநாதன் கண்காணிப்பு அதிகாரி எஸ். முரளி கிருஷ்ணன், போக்குவரத்து துறை மேலாளா் எஸ் கிருபானந்தசாமி, செயலாளா் இந்திரனில் ஹசிரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT