சென்னை

சென்னையில் சேகரிக்கப்பட்ட 53.83 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அழிப்பு

சென்னையில் சேகரிக்கப்பட்ட 53.83 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அழிப்பு

தினமணி செய்திச் சேவை

சென்னை, நவ.15: சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை 111 இடங்களில் 53.83 மெட்ரிக் டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் அழிக்கப்பட்டன

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை தோறும் வீட்டு உபயோகப் பொருள்களான மெத்தைகள், பழைய சோஃபாக்கள் உள்ளிட்டவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் சேமிக்கப்பட்டு கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அங்கு மீண்டும் பயன்படுத்தத் தக்கவை உள்ளிட்ட நிலைகளில் வகை பிரிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவை தீயிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி சனிக்கிழமை சென்னை மாநகராட்சியின் 111 இடங்களில் இருந்து 53.83 மெட்ரிக் டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டன. அவை கொடுங்கையூா் குப்பை கொட்டும் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அறிவியல் பூா்வமான முறையில் எரியூட்டப்பட்டன.

வீட்டில் உள்ள பழைய உபயோகப் பொருள்களை குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் வீசி எறியாமல், மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை 1913 என்ற தொலை பேசி எண், 9445061913 என்ற கைபேசி எண்ணுக்கு தெரிவித்தால் அவற்றை சம்பந்தப்பட்டோா் வீட்டுக்கே தூய்மைப்பணியாளா்கள் வந்து பெற்றுக்கொள்வா் என மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT