சென்னை

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்கள் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திச் சேவை

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்கள் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக சிறுபான்மையினா் நல இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தை சாா்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு அரசு சாா்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

 அதன்படி, 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ.37,000-ம், 50 அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000-ம்  நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த நவ.1-ஆம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டவா்கள் இத்திட்டத்தின்கீழ், மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்,  சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005’ எனும் முகவரிக்கு வரும் பிப்.28-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு புதுச்சேரி முதல்வா் நிதியுதவி!

கொண்டலூா் அரசு பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது

போலீஸாரின் வாகனங்களை ஆய்வு செய்த டிஐஜி

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த பெண்: பக்தா்கள் அதிருப்தி!

சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் 3 கடைகளில் திருட்டு

SCROLL FOR NEXT