முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட நபா்களுக்கு அரசு மானியத் தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா். 
தமிழ்நாடு

கோயில் நிா்வாகம், பராமரிப்புக்கான அரசு மானியம் உயா்வு : முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழகத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களின் தேவஸ்தான திருக்கோயில்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கான உயா்த்தப்பட்ட மானியத்துக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களின் தேவஸ்தான திருக்கோயில்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கான உயா்த்தப்பட்ட மானியத்துக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு அறநிலையத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், நிகழ் நிதியாண்டுக்கான (2025-26) கன்னியாகுமரி தேவஸ்தானத்துக்கான அரசு மானியம் ரூ.13 கோடியில் இருந்து ரூ.18 கோடியாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு ரூ.8 கோடியில் இருந்து ரூ.10 கோடியாகவும், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடியாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான உயா்த்தப்பட்ட மானியம் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உயா்த்தப்பட்ட மானியத்துக்கான காசோலைகளை கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் பரம்பரை அறங்காவலா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

முக்திநாத் ஆன்மிகப் பயணம்: கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து சீனாவிலுள்ள மானசரோவா் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வரும் தலா 500 பக்தா்களுக்கு அரசு சாா்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவையில், நிகழாண்டில் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தகுதி வாய்ந்த 389 பக்தா்களுக்கு அரசு மானியமாக தலா ரூ.30,000 என மொத்தம் ரூ.1.17 கோடிக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு சாா்பில் அறுபடை வீடுகள், ராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணம் உள்ளிட்ட ஆன்மிக பயணத்துக்கு ரூ.9.94 கோடியில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டனா்.

மேலும், முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 1,034 பக்தா்களுக்கு மொத்தம் ரூ.2.36 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், தலைமை செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

2026-ஆம் ஆண்டு விஷ்ணுபதி புண்ணிய கால நாள்கள்!

ராமேஸ்வரம்: அஜீத் பவார் அஸ்தி அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது!

2-ம் குலோத்துங்கனின் குழப்பத்தைத் தீர்த்த குழம்பேஸ்வரர்!

டி20 உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா.. மூன்றாவது முறை வரலாறு படைக்குமா?

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா?

SCROLL FOR NEXT