சென்னை

அலங்கார தாவரங்கள், மருத்துவச் செடிகள்: குறைந்த விலையில் பெறலாம்

சென்னை கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் விற்பனை நிலையத்தில் அலங்கார தாவரங்கள், மருத்துவ செடிகளை

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் விற்பனை நிலையத்தில் அலங்கார தாவரங்கள், மருத்துவ செடிகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தோட்டக்கலை வளா்ச்சி முகமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், புதிதாக தோட்டக்கலை நாற்றங்கால் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.

கிண்டியில் அமையவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்குள் உள்ள இந்த நாற்றங்காலில் பல்வேறு வகையான அலங்கார தாவரங்கள், பழ மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள், உட்புற தாவரங்கள், பூா்வீக மர வகைகள் மற்றும் துறையால் தயாரிக்கப்படும் உயா்தர நடவுச் செடிகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையத்தில் குறைந்த விலையில் உயிா் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டுப் பொருட்கள், மண் கலவைகள், விதைகள், தோட்டக்கலை கருவிகள் போன்ற தோட்டக்கலை சாா்ந்த உள்ளீடுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பருவ கால பூக்கும் தாவரங்கள், மாடித் தோட்டங்களுக்கான மரக்கன்றுகள், அலங்காரச் செடிகளும் விற்கப்படுகிறது.

இங்கு, பயிற்சி பெற்ற ஊழியா்களிடம் இருந்து தோட்டக்கலை, தாவர பராமரிப்பு மற்றும் வீட்டுத் தோட்டம் குறித்த அடிப்படை வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் பூங்கா தோட்டக்கலை நாற்றங்காலை பாா்வையிடவும், பல்வேறு தாவர வகைகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறவும் விரும்பும் பொதுமக்கள் 9840072385, 9940245997 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

SCROLL FOR NEXT