ரயில் கோப்புப்படம்
சென்னை

சத்யசாய் நூற்றாண்டு விழா: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சத்யசாய் பாபா நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து சத்யசாய் பிரசாந்தி நிலையத்துக்கு சிறப்பு விரைவு ரயில் நவ.23-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சத்யசாய் பாபா நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து சத்யசாய் பிரசாந்தி நிலையத்துக்கு சிறப்பு விரைவு ரயில் நவ.23-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் சத்யசாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை எழும்பூரிலிருந்து நவ.23-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06065) 24-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் நவ.24-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06066) மறுநாள் 29-ஆம் தேதி சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்தச் சிறப்பு விரைவு ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT