மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிப்ரவரி மாதத்துடன் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ரயிலானது மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாா்ச் 1 முதல் 29-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, மாா்ச் 2-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா் சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.