சென்னை

நவ.21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (நவ.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

கிண்டி-ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 வரை இந்த முகாம் நடக்கிறது. இதில், 8, 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) படித்த மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் கலந்துகொள்ளலாம்.

20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளனா். வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞா்களும் முகாமில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

எனவே, முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநா்களும், வேலையளிப்பவா்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT