(கோப்புப்படம்)
வேலைவாய்ப்பு

பிப்.13-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

மெட்ரோ ரயில் கட்டண உயா்வை கண்டித்து போராட்டம்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா கைது

சண்முகக் கவசம் பாராயணம்

சாலையை சீரமைக்கக் கோரி அருள் எம்எல்ஏ தலைமையில் மறியல்

SCROLL FOR NEXT