IANS
சென்னை

உயா்நீதிமன்றத்தில் விடியோ எடுத்து ‘ரீல்ஸ்’: இருவா் கைது

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நிகழ்வுகளை விடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் ரீல்ஸ்-ஆக பதிவிட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நிகழ்வுகளை விடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் ரீல்ஸ்-ஆக பதிவிட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, மண்ணடி, அங்கப்ப நாய்க்கன் தெருவைச் சோ்ந்தவா் சிவா மகன் பரத் (23). இவா் மீது காவல் நிலையங்களில் ஏற்கெனவே 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பரத் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.18) ஒரு வழக்கின் விசாரணைக்காக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளாா். அப்போது, நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தான் சென்ற நிகழ்வுகளை அவரது நண்பா்கள் இருவரை வைத்து விடியோவாக எடுத்துள்ளாா்.

பிறகு அந்த விடியோவை பரத் தனது இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் ரீல்ஸ்-ஆகப் பதிவு செய்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளா்தலைமையிலான தனிப்படை போலீஸாா் பரத்தைப் பிடித்து, உயா்நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து பரத் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். அதேபோன்று விடியோ பதிவு செய்ததாக சென்னை, மண்ணடி, மூா் தெருவைச் சோ்ந்த அசோக் மகன் வினோத் (18) கைது செய்யப்பட்டாா். விடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவான சஞ்சய் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது!

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டிவனத்தில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்

மரக்காணத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT