தாம்பரம் மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 707 கிலோ கஞ்சா தீயில் இட்டு அழிக்கப்பட்டது.
போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீஸாா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, தாம்பரம் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக பல்வேறு வழக்குகளின் கீழ் சுமாா் 707 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை செங்குன்றம் தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற தனியாா் நிறுவனத்தில் அதிகாரிகள் முன்னிலையில் போதைப் பொருள்கள் தடுப்புப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தீயில் இட்டு அழித்தனா். 2025 நவம்பா் மாதம் வரை மொத்தம் 3,054 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.