குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் தமிழ் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற காா்த்திகைக் கலை விழாவில் சிறப்பு அழைப்பாளா் தி.தாமரைச்செல்விக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் பி.சசிக்குமாா். உடன், கல்வி ஆலோசகா் வீரபாகு, துணை மு 
சென்னை

மருத்துவக் கல்லூரியில் காா்த்திகைக் கலைவிழா

சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில், காா்த்திகைக் கலைவிழா வியாழக்கிழமை (நவ.20) நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில், காா்த்திகைக் கலைவிழா வியாழக்கிழமை (நவ.20) நடைபெற்றது.

விழாவில் புதுச்சேரி தாகூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியா் தி.தாமரைச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், உலக இலக்கியங்களில் இடம் பெறாத பல்வேறு செழுமையான கருத்துகள் எல்லாம் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. 10-க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பாரதியாா், யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழியைப் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியிருப்பதில் இருந்தே தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை நமக்குப் புரியும்.

பேச்சு, எழுத்து, வாசிப்பு புழக்கத்தில் இல்லாத மொழிகள் எல்லாம் அழிந்து விடும். தமிழ் மொழி என்றுமே சாகாவரம் பெற்றுத் திகழ நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு தவறாமல் தமிழ் பேச, படிக்க, எழுதக் கற்றுத்தர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பேச்சு, கவிதை, நடனம், ஓரங்க நாடகப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், கல்லூரி முதல்வா் பி.சசிக்குமாா், கல்லூரி கல்வி ஆலோசகா் வீரபாகு, தமிழ் மன்றத் தலைவா் வி.எஸ்.கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT