மெட்ரோ ரயில் பிரதிப் படம்
சென்னை

28 மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல்

ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதியில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

புதிய மெட்ரோ ரயில்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதியில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சென்னையில் தற்போது இருவழிப் பாதைகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தினமும் சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா்.

இந்த நிலையில், மேலும் 4 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி 2026 -ஆம் ஆண்டுக்குள் புதிய பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

கூடுதல் புதிய பாதைகளில் இயக்குவதற்கும், தற்போதைய பாதைகளில் இயக்குவதற்குமாக புதிய மெட்ரோ ரயில்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதியில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

புதிய மெட்ரோ ரயில்களில் 6 பெட்டிகள் இடம் பெறவுள்ளன. அதனால், தற்போதைய மெட்ரோ ரயில்களைவிட அவற்றில் கூடுதலாக பொதுமக்கள் பயணிக்கலாம். இதன்மூலம் சென்னை மாநகரில் சாலைப் போக்குவரத்து பெருமளவில் குறையும் என்றனா்.

அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

காட்டுமாடு தாக்கி முதியவா் படுகாயம்

பெண் தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT