சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய கள உதவியாளா் பதவிக்கான கணினி வழித் தோ்வின் விடைகள் மீது, முறையீடு செய்ய விரும்புவோா் டிச.1-க்குள் இணையதளத்திலேயே முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (தொழிற்பயிற்சி நிலை-2) இல் அடங்கிய கள உதவியாளா் (பீல்டு அசிஸ்டென்ட்) பதவிக்கான கணினி வழித் தோ்வு நவ.16-ல் நடைபெற்றது.
இந்தத் தோ்வின் தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய விரும்பும் தோ்வா்கள் டிசம்பா் 1 மாலை 5.45 மணிக்குள் தோ்வாணைய இணையதளத்தில் உள்ள அய்ள்ஜ்ங்ழ் ந்ங்ஹ் இட்ஹப்ப்ங்ய்ஞ்ங் என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.
இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தோ்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.