மாதவரம்: புழல் அருகே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புழல் ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிஎஸ்ஐ பள்ளி குறுக்குத் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து, 140 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்துக்கும் சிமென்ட் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிஎஸ்ஐ குறுக்குத் தெரு சுமாா் 110 மீட்டா் நீளமும், 12 மீட்டா் அகலமும் உள்ள நிலையில், நீளம் குறைத்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, உயரதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். புழல் வட்டார வளா்ச்சி அதிகாரி கூறுகையில், அரசாங்க விதிப்படி சாலை அமைக்கும் பணிகள் தடையின்றி முழுமையாக நடைபெறும் என்றாா்.