முகப்பு
சென்னை

பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை

பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 18 அக்டோபர், 2025 at 7:19 PM
பகிர்:

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த மின்னஞ்சலில் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும், போலீஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனால் வதந்தி பரப்பும் நோக்கில் அந்த மின்னஞ்சல் வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →