செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படுவது பற்றி...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், புயல் சின்னம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி நீர் முதல்கட்டமாக திறந்துவிடப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், ஏரியின் நீர் அளவு 21 அடியை எட்டியுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Water released from Chembarambakkam Lake: Flood warning issued
இதையும் படிக்க : இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட்; 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.